• Mon. Oct 20th, 2025

‛‛திமுக தான் டார்கெட்’’.. ‛எக்ஸ்’ வலைதள முகப்பு பக்கத்தில் எடப்பாடி செய்த மாற்றம்..

Byமு.மு

Mar 9, 2024
திமுக தான் டார்கெட் எக்ஸ் வலைதள முகப்பு பக்கத்தில் எடப்பாடி செய்த மாற்றம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,

போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில்,

இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,

வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது …,

கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் “Say No To Drugs & DMK” என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன்.

கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுக-ன் போராட்டம் தொடரும்!