• Mon. Oct 20th, 2025

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒப்பந்தம்!.

Byமு.மு

Mar 9, 2024
திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒப்பந்தம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும்;

வருகிற 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.