• Mon. Oct 20th, 2025

மோடி அரசின் சிறுபான்மையின விரோத போக்கு- திருமாவளவன்

Byமு.மு

Mar 12, 2024
கும்பலாட்சியைத்' தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 இன்று நடைமுறைக்கு வருவதாக மோடி அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும்; இந்துக்களாயினும் இலங்கையைச் சார்ந்த தமிழர்களுக்கும் குடியுரிமை இல்லை என்கிறது இச்சட்டம்.

இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும் கேடான முயற்சி.

தேர்தல் பத்திரங்களின் மூலம் பெற்ற நன்கொடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜகவுக்கு எதிராகவுள்ள நிலையில், அதனைத் திசை திருப்பும் தீங்கான சதிமுயற்சி.

வங்கதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சமூகப் பிளவை உருவாக்கி அமைதியைச் சிதைத்து அரசியல் ஆதாயம் தேடும் அற்ப முயற்சி.

மோடி அரசின் இத்தகைய சிறுபான்மையின விரோத போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.