• Sun. Oct 19th, 2025

இந்தியா – அமெரிக்கா படைகள் இடையேயான கூட்டு பேரிடர் நிவாரணப் பயிற்சி!.

Byமு.மு

Mar 18, 2024
இந்தியா – அமெரிக்கா படைகள் இடையேயான கூட்டு பேரிடர் நிவாரணப் பயிற்சி

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே முப்படைகள் பங்கேற்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியான   TIGER TRIUMPH – 24, கிழக்கு கடல் பகுதியில் இன்று முதல் (மார்ச் 18)  31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியக் கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், இந்தியக் கடற்படை விமானங்கள், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள், இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் விரைவு அதிரடி மருத்துவக் குழு  ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். அமெரிக்க ராணுவ வீரர்கள், அமெரிக்க கடற்படையினர் மற்றும் அந்நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் அமெரிக்கா சார்பில் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண செயல்பாடுகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் துறைமுக கட்டப் பயிற்சியை மார்ச் 18 முதல் 25 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்படைப் பணியாளர்களும் இதில் பங்கேற்பார்கள். துறைமுகக் கட்டம் நிறைவடைந்ததும், கப்பல்களில் வீரர்கள் கடலுக்குச் சென்று மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பாக கடல்சார்  நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.