• Sun. Oct 19th, 2025

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்து!.

Byமு.மு

Mar 18, 2024
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்து

ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்தியா -ரஷ்யா இடையே காலத்திற்கேற்ற வகையில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

“ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உத்தி சார்ந்த கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம்.”