• Sun. Oct 19th, 2025

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

Byமு.மு

Mar 20, 2024
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

1. வடசென்னை – ராயபுரம் மனோ
2. தென்சென்னை – ஜெயவர்தன்
3. காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
4. அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
5. கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
6. ஆரணி – கஜேந்திரன்
7. விழுப்புரம் – பாக்கியராஜ்
8. சேலம் – விக்னேஷ்
9. நாமக்கல் – தமிழ்மணி
10. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
11. கரூர் – தங்கவேல்
12. சிதம்பரம் (தனி) – சந்திரகாசன்
13. நாகப்பட்டினம் (தனி) – சுர்சித் சங்கர்
14. மதுரை – சரவணன்
15. தேனி – நாராயணசாமி
16. ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

தேமுதிக பாஜக கூட்டணியில் இடம்பெறுமா அல்லது அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் நாளை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.