கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் 2023-2024 ஆம் ஆண்டு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 16.12.2023 முதல் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 110 கனஅடி / வினாடி வீதம் (ஒரு நாளைக்கு 9.50 மில்லியன் கனஅடி வீதம்) நீர் இருப்பு மற்றும் நீர் பொருத்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.