• Sun. Oct 19th, 2025

குஜராத்தில் பாஜக வேட்பாளர் ரூபாலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ராஜ்புத் மக்கள் போர்க்கொடி!..

Byமு.மு

Apr 10, 2024
குஜராத்தில் பாஜக வேட்பாளர் ரூபாலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

 ராஜ்புத் என்று அழைக்கப்படும் சத்திரிய சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஜராத் பாஜக எம்.பி. பர்சோத்தம் ரூபாலாவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. குஜராத்தில் பாஜகவை சேர்ந்த ராஜ்புத் தொகுதியின் வேட்பாளர் பர்சோத்தம் ரூபாலாவின் ராஜ்புத் சமூகத்திற்கு எதிரான பேச்சு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், இப்பிரச்சனை ராஜ்புத் சமூகத்தினர் அதிகம் வாழும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக-விற்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் குஜராத்திலும், இதர மாநிலங்களிலும் பாஜக பேரணி நடத்திய வீடியோவை அம்மாநில செயல் காங்கிரஸ் செயல் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ராஜ்புத் சமூகத்தை அவமதித்த பாஜக வேட்பாளர் பர்சோத்தம் ரூபாலாவின் வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும் என்றும், தனது எக்ஸ் பக்க பதிவில் ஜிக்னேஷ் மேவானி வலியுறுத்தியுள்ளார்.