• Sun. Oct 19th, 2025

தமிழ்நாடு எதிலும் முதலிடம்… ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை…

Byமு.மு

Apr 11, 2024
தமிழ்நாடு எதிலும் முதலிடம்... ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை

தமிழ்நாடு எதிலும் முதலிடம், அதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழுச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி. அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அறிக்கைகளும் வரைப்படங்களும் தெளிவுபடுத்துகின்றன. உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வுசெய்துள்ளது. மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாக பகுதிகள் அனைத்தையும் ஆய்வுசெய்து அறிக்கைகளை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.