• Sun. Oct 19th, 2025

நெல்லையில் ராகுல் காந்தி உரை!..

Byமு.மு

Apr 12, 2024
நெல்லையில் ராகுல் காந்தி உரை

தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல குடும்ப உறவு என்று நெல்லையில் ராகுல் காந்தி கூறி வருகிறார். அனைத்து மொழி, கலாச்சாரம் புனிதமானவை என நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் நிறைய செய்திகளையும், தரவுகளையும் நாட்டு மக்கள் அறிய முடியும்.

தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் உங்கள் கலாச்சாரம், பண்பாட்டுக்கு தலை வணங்குகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் நிறைய செய்திகளையும், தரவுகளையும் நாட்டு மக்கள் அறிய முடியும். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அன்பு, பாசத்தை தமிழ்நாடு மக்கள் பொழிகின்றனர். தமிழ்நாடுக்கு வருவதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்கள் மீது நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வை மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிடுவோம் என்று நெல்லையில் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். நீட் தேர்வு என்பது ஏழை மக்களுக்கு எதிரானது. மாநில அரசு விரும்பினால் மட்டுமே, அந்த மாநிலத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்படும். இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தமிழர் மொழி, பண்பாட்டை மோடி அல்ல உலகின் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கொக்கரிக்கிறார்கள். இளைஞர்களை வேலையில்லாத நிலைமைக்கு தள்ளிவிட்டு விட்டார் பிரதமர் மோடி. இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்டுள்ள யுத்தம் தான் இந்த தேர்தல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.