• Sat. Oct 18th, 2025

அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

Byமு.மு

May 22, 2024
அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியது

142 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியது. அந்தமானில் நீண்டநேரம் வானில் வட்டமடித்த நிலையில் வானிலை சீராகாததால் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. விமானம் மீண்டும் திரும்பியதால் சென்னை விமான நிலையத்தில் அந்தமான் பயணிகள் 142 பேர் தவித்து வருகின்றனர். மோசமான வானிலையால் விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் நாளை மீண்டும் அந்தமான் புறப்படும் என்றும் அறிவித்துள்ளது.