• Sat. Oct 18th, 2025

வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-கூட்டுறவுத்துறை உத்தரவு

Byமு.மு

May 23, 2024
வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-கூட்டுறவுத்துறை உத்தரவு

ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். சென்னை மற்றும் புறநகரில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.