வாழ்க்கை என்பது முட்டாள் ஒரு நாள் எழுதப்பட்ட கதை
வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜ்ஜியத்தை குறிக்கும் சூனியன்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர் . அவரின் கூற்றுப்படி விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படத்தின் பெயர் தான் முட்டாள் எழுதிய கதை
வெவ்வேறு சூழல்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு பெண்களைப் பற்றிய கதை. இது வயது பேதம் இன்றி இன்றுவரை வாழ்வில் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்களின் நிலை பற்றி இப்படம் அலசுகிறது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்.மனம் இந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது அதில் இருந்து அவர் எப்படி மீளுகிறார்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக படம் பிடித்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குனர் ஆனந்தராஜனின் கூறும் பொழுது
ஒரு முட்டாளின் கதை இது எனக்கு ஐந்தாவது படம்
சினிமாவுக்கு வரும் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்கள். சில காரணங்களால் சில காலகட்டங்களால் எனது முந்தைய படங்கள் மீது பெரும் விமர்சனமும் வரவேற்பும் இல்லாமல் போய்விட்டது அதை இப்படம் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
காண்போருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வரும் சிறப்பாக வந்துள்ளது
இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ளலாம்.
பாலியல் வன்கொடுமைகளுக்கான தீர்வு என்ன என்பதை சமூக அக்கறையுடன் இப்படத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார்
படம் பார்க்கும் ஒவ்வொரு பெண்களும் தன்னை முழுமையாக இந்த கதைக்குள் இணைத்துக் கொள்வார்கள்.
படம் அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கையை பிரதி எடுத்திருக்கிறது
நிச்சயம் அனைவரும் கொண்டாடப்படும் படமாக இருக்கும்
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது
என்று இயக்குனர் ஆனந்தராஜன் p தெரிவித்தார் ….!
