• Sun. Oct 19th, 2025

ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை; அமைச்சர் சிவசங்கர்…

Byமு.மு

Dec 18, 2023
ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை; அமைச்சர் சிவசங்கர்

மாற்றுதிறனாளிகளின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அவர்கள் தகவல்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி ரூ.500.97 கோடி பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழகம் – 352, கோயம்புத்தூர்-100, மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.