• Sat. Oct 18th, 2025

வௌ்ள நிவாரணம் வழங்குவதில் இரட்டை வேடம் பாஜவுக்கு வாக்களிக்காத மாநிலங்களை பாஜ பழி வாங்குகிறது

Byமு.மு

Jul 29, 2024
வௌ்ள நிவாரணம் வழங்குவதில் இரட்டை வேடம் பாஜவுக்கு வாக்களிக்காத மாநிலங்களை பாஜ பழி வாங்குகிறது

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் புள்ளிவிவரங்களுடன் குற்றம்சாட்டி உள்ளார். அவர் தன் டிவிட்டர் பதிவில், “2024-25 நிதிநிலை அறிக்கையில், நீர்ப்பாசனம் மற்றும் வௌ்ளத்தடுப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது நிதிமைச்சர், உயிரியல் அல்லாத பிரதமர் அரசின் இரட்டை வேடத்தை தௌிவாக விளக்கி உள்ளார்.

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த பிரிவில் இருந்து, பீகாருக்கு ரூ.11,500 கோடி நிதி உதவி வழங்குவோம். வௌ்ளமேலாண்மை மற்றும் அதுதொடர்பான திட்டங்களுக்கு அசாமுக்கு நிதியுதவி வழங்குவோம். உத்தரகாண்ட், சிக்கிம் மாநிலங்களுக்கு உதவி செய்வோம். இமாச்சலபிரதேசத்துக்கு பலதரப்பு வளர்ச்சி உதவிகள் மூலம் எங்கள் அரசு உதவிகள் வழங்கும் என்றார்.

அடிப்படையில் நிதியமைச்சர் கூறியது என்னவென்றால், பாஜ ஆளும் மாநிலங்களுக்கு மானிய வடிவில் நிதி உதவி கிடைக்கும். ஆனால் காங்கிரஸ் ஆளும் இமாச்சலபிரதேசத்துக்கு பலதரப்பு வளர்ச்சி உதவிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். அதாவது கடன்கள். அதை மாநிலம் திருப்பி செலுத்த வேண்டும். வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவதில் பாஜ அரசின் இரட்டை வேடத்தை இந்த அறிவிப்பு காட்டுகிறது. இது சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு வாக்களிக்காத மக்களை பழி வாங்கும் நடவடிக்கை” என்று குற்றம்சாட்டி உள்ளார்.