• Sat. Oct 18th, 2025

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்..!!

Byமு.மு

Aug 1, 2024
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 31,000 கன அடியும், கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது. திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையின் 200 மீட்டர் உடைந்து சேதமடைந்தது. உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.