• Sun. Oct 19th, 2025

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

Byமு.மு

Dec 18, 2023
4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18.122023 அன்று பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று 18.12.2023 பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.