• Sun. Oct 19th, 2025

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்…சென்னை தி.நகரில்…

Byமு.மு

Dec 18, 2023
மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 27.12.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் கீழ்கண்ட விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும். 

புகார்களை 20.12.2023 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அனுப்பவும்.

கீழ்நிலை அஞ்சலகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு மனநிறைவு தரும்வகையில்  தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே, மண்டல அளவிலான குறைதீர்வு முகாமில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பப்பட வேண்டும். புகார்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு என குறிப்பிடப்பட வேண்டும். தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

1. தி.நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 0172. மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
3. சூளைமேடு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 0944. ராயப்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 014
5. கிரீம்ஸ் ரோடு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 0066. தேனாம்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 018
7. நுங்கம்பாக்கம் மண்டல வளர்ச்சி அலுவலகம், சென்னை 600 0348. கோபாலபுரம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 086