• Sun. Oct 19th, 2025

பிரதமர்-முதல்வர் சந்திப்பு…

Byமு.மு

Dec 18, 2023
பிரதமர்-முதல்வர் சந்திப்பு

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) புதுதில்லியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்திக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.