• Mon. Oct 20th, 2025

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Byமு.மு

Aug 9, 2024
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்ரவரி 26, 2023 முதல் சிறையில் இருந்து வருகிறார். சிபிஐ கைது செய்ததை தொடர்ந்து 2023 மார்ச் 9-ம் தேதி அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது.