• Mon. Oct 20th, 2025

நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார் ?

Byமு.மு

Aug 10, 2024
நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு நாகேந்திரன் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் நிர்வாகி ஜெயபிரகாஷை கடத்தி மிரட்டிய வழக்கில் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் பின்னணியில் இருந்து அழுத்தம் தந்ததாக நாகேந்திரன் தரப்பு தெரிவித்துள்ளது.