• Sun. Oct 19th, 2025

அதிமுகவை இ.பி.எஸ். அதளபாதாளத்தில் தள்ளிவிட்டார்!..

Byமு.மு

Aug 26, 2024
அதிமுகவை இ.பி.எஸ். அதள பாதாளத்தில் தள்ளிவிட்டார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். எதிர்காலத்தில் தேர்தல் நேரத்தின் போது முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. மக்களும் அதைத்தான் விரும்புகின்றனர். சசிகலாவின் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை வரவேற்கிறேன்.

அதிமுகவை ஒன்று சேர்க்க இந்த விநாடி வரை முயற்சி செய்து கொண்டுள்ளேன். அதிமுகவை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் வளர்த்துள்ளனர். அவர்கள் தந்த வெற்றியை காப்பாற்றக் கூடிய அளவில் அதிமுக இல்லை.

இது எதனால், யாரால் உருவானது என அனைவருக்கும் தெரியும். சர்வாதிகாரத்தின் உச்சநிலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

இதற்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு அதிமுக தொண்டர்கள் கையிலும், தமிழக மக்கள் கையிலும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.