• Sun. Oct 19th, 2025

போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு

Byமு.மு

Aug 26, 2024
போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு

எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் விபத்துல்லா பயணம் என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட சண்டை பயிற்சி நடிகர் சாய் தீனா மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் குமார், திருவொற்றியூர் உதவி ஆணையாளர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன், முத்து, அருணகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இளைஞர்களுக்கு வாலிபால், பெண் குழந்தைகளுக்கு லெமன் அண்ட் ஸ்பூன், பெண்களுக்கு மியூசிக்கல் சேர், சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பின்னர், தலைக்கவசம் உயிர்க்கவசம், அதிவேகம் ஆபத்தானது, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டாதீர் என்று உறுதிமொழி ஏற்றனர்.