ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகள் மீட்புப் பணி; தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள். ஶ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் முடிந்த அளவு உதவி வருகின்றனர்.- ஶ்ரீவைகுண்டத்தில் நிற்கும் இரயிலில் உள்ள பயணிகளுக்கு உணவு வழங்க நேற்று இரவு வரை பேரிடர் மேலாண்மைக்குழு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.
வாகனத்தின் மூலம் உணவு கொண்டு செல்ல எடுத்த முயற்சி கைகூடாத நிலையில் நடந்தே கொண்டு செல்லவும் பெரு முயற்சி எடுத்துள்ளனர். மூன்று கிலோமீட்டர் வரை அருகில் சென்றுள்ளனர். அவைகள் யாவும் பலனளிக்காத நிலையில் காலையிலும் முயற்சிகள் தொடர்ந்துள்ளனர்.

காலையில் ஹெலிஹாப்டர் மூலம் கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள உள்ளூர் மக்கள் ரயில் பயணிகளுக்கு முடிந்த மட்டும் பல்வேறு வகையிலும் உதவியுள்ளனர் என்று இரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அருகில் உள்ள பெரிய ஏரி மதகோரம் உடைப்பு ஏற்பட்டதால் நீரின் வேகம் குறையாமல் இருக்கிறது. பல்வேறு வகையில் இன்று காலையிலிருந்து ஶ்ரீவைகுண்டம்
ரயில் நிலையத்தை அணுக பேரிடர் மேலாண்மை குழு முயற்சி எடுத்து வருகிறது.
மணியாச்சியில் முதலுதவிக்கான மருத்துவக்குழு உள்ளிட்ட முழு தயாரிப்போடு ரயில்வே நிர்வாகம் உள்ளது. போதிய பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பயணிகளை மணியாச்சிக்கு கொண்டுவர எல்லாவகையிலும் முயற்சி எடுத்து வருவதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு இரயில்வேயின் சார்பில் இதற்கு பொறுப்பான அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறேன்.
கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் ரயில் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு டிடிவி தினகரன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தல்

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கனமழை காரணமாக வழித்தடங்கள் சேதமடைந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே 500க்கும் அதிகமான பயணிகளுடன் கடந்த இரண்டு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 24 மணி நேரங்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் ரயிலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் சிக்கியிருப்பதால் அவர்களுக்கான அவசர கால மருத்துவ உதவியை ஏற்படுத்தி தருவது இந்த நேரத்தில் அவசியமாகிறது.
ஆகவே, அவசரகால மருத்துவக்குழுவை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, ரயிலில் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.