• Sat. Oct 18th, 2025

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Byமு.மு

Aug 31, 2024
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு, வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.