• Mon. Oct 20th, 2025

தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி: செல்வப்பெருந்தகை

Byமு.மு

Sep 9, 2024
தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி: செல்வப்பெருந்தகை

புதுக்கோட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடப்பதால் அதை காமராஜர் ஆட்சி என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகம் இல்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதற்கு பெயர் தான் காமராஜர் ஆட்சி.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் விஷயங்கள் எல்லாம் பிரச்னைக்கு உரியதாகவே உள்ளது. விஜய் கட்சி பெயரை பதிவு செய்ததற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை காட்டினால் தான் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மகா விஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. கைது செய்யவில்லை என்றால் ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேட்கும். எந்த மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கைகளை பள்ளிகளில் கற்று தருவது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.