• Sun. Oct 19th, 2025

தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு

Byமு.மு

Sep 19, 2024
தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு

நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டத்திற்கு சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த போருரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் பசுமைத்தாயகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ரைன்போ சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பசுமைத்தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டார். நிகழ்ச்சியை துவக்கி வைத்த சவுமியா அன்புமணி, தமிழ்நாட்டில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக திநகர் போன்ற நகர பகுதிகளில் காற்று மாசால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்தின்போது ஒரு மரம் அகற்றப்பட்டால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும். ஆனால் அதனை சரியாக செய்கிறார்களா என தெரியவில்லை. அதற்கான விவரங்களை கேட்டு வருகிறோம். நீர்நிலைகளை பாதுக்காக்கும் பணியில் ஈடுபடுவோரை அங்கீகரிக்கும் விதமாக நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் அரசின் திட்டம் வரவேற்கதத்தக்கது. யார் நல்லது செய்தாலும் அதனை பாரட்ட வேண்டும். இதுபோன்ற செயல் நீர்நிலை பாதுகாப்பில் ஈடுபடும் பலரை ஊக்கப்படுத்தும் என்றார்.