• Sun. Oct 19th, 2025

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி

Byமு.மு

Sep 20, 2024
துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பால் நாட்டின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில அரசுகளின் அதிகார பறிப்பு மேலோங்கி காணப்படும். துணை முதல்வர் பதவிக்கான தகுதி உதயநிதிக்கு உள்ளது என்று நம்புகிறேன். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரூ.6,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டெடுத்தது வரவேற்கத்தக்கது.

உக்ரைன்-ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று அந்நாட்டு அதிபர்களை சந்தித்து போரை நிறுத்த வேண்டுமென முயற்சி செய்து வருகிறார். இது வரவேற்கதக்கது தான். அதேபோல் மணிப்பூரில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.