• Sun. Oct 19th, 2025

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!..

Byமு.மு

Sep 23, 2024
பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

5வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரஜ்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும், அப்ஜித், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா துரோணவல்லி, தானியா , வைஷாலி ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் பங்கேற்றது. இதில் ஆடவர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இதேபோல் இந்திய மகளிர் அணியும் இந்த முறை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறது.