• Wed. Dec 3rd, 2025

அரசியல் ரீதியிலான சிக்கலால் காங்கிரஸ் ஆலோசனை

Byமு.மு

Sep 25, 2024
அரசியல் ரீதியிலான சிக்கலால் காங்கிரஸ் ஆலோசனை

ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சித்தராமையாவுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைமை திடீர் ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால், முதல்வர் சித்தராமையா மீது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார். அதையடுத்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையாவுக்கு எதிராக டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.