• Sat. Oct 18th, 2025

திண்டுக்கல் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு!..

Byமு.மு

Sep 26, 2024
திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் பால் நிறுவனம் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு போன்றவை பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருப்பதியில் லட்டு செய்வதற்கு ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்தது எனவும், ராஜ் பால் என்ற பெயரில் பால் சப்ளை செய்து வந்துள்ளதும் தெரிய வந்தது. கடந்த ஜூன் மாதமே ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்ததோடு, இருப்பில் இருந்த நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் பால் நிறுவனம் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக தேவஸ்தானம் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நிபந்தனைகளை மீறி நெய்யில் கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக ஏ.ஆர்.டெய்ரி மீது நேற்று புகார் எழுந்த சூழலில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரை அடுத்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.