மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதளின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மைச் செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகின்ற 21.12.2023 (வியாழக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை அப்போலோ மருத்துவனையுடன் இணைந்து நடத்தவுள்ள மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் இந்த மருத்துவ முகாமைத் தொடங்கி வைக்கிறார்கள். இம் மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இச்சிறப்பு முகாமில் Blood Investigation, ECG, Bone Mineral Density Test, Comprehensive Eye Checkup, Dental Checkup உள்ளிட்ட பரிசோதனைகள் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இச்சிறப்பு முகாமில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோய்களை முதலிலேயே கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சையினை மேற்கொள்ள உரிய ஆலோசனை வழங்கப்படும், அது தொடர்பான பரிசோதனைகளை அப்போலோ மருத்துவமனையில் சலுகை எடுத்துக்கொள்ள அடிப்படையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாமில் கலந்துக்கொள்வதற்கு பத்திரிகையாளர்கள் தங்களின் விவரங்களை 9498042409 / 9498042410 / 9600646133 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புக்கொண்டு பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணைப்பில் உள்ள கூகுள் சீட்டில் (Google Sheet) விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1yxWWsJJK-3WGTkKVjfE_ZLPPgxM1FS6n6fTADpraUtY/edit#gid=0