• Sun. Oct 19th, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Byமு.மு

Oct 3, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரில் 25 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.