• Sat. Oct 18th, 2025

மோடிதான் சூப்பர் ஸ்டார்.. பட்டத்தை அவரவரே கொடுத்துக்கொள்ளக்கூடாது.. சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

Byமு.மு

Nov 29, 2024
சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவி என்பதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பாஜவிற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம், சனாதனத்தை குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர் தான் தர வேண்டும். சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது.

அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி தான். 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற அவருக்கு மிகச்சிறந்த தலைவர் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டமளித்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும்? ஈவிகேஎஸ் இளங்கோவன் நல்லபடியாக உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே செய்ய முடியும். இவ்வாறு கூறினார்.