• Sun. Oct 19th, 2025

பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்…

Byமு.மு

Dec 21, 2023
பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

இன்று (21.12.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அப்போலோ மருத்துவனையுடன் இணைந்து நடைபெற்ற தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மைச் செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள்.