பெரும் மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பகுதிகளில், 5வது நாளாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நிவாரணப் பொருட்கள் வழங்கி, மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
இரண்டு நாட்கள் பெய்த பெரும்மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பகுதியில், 5வது நாளாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், இன்று (22.12.2023) நிவாரணப் பொருட்கள் வழங்கி, மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களில் உள்ள 14 கிராமத்தில் வசிக்கும், 25 ஆயிரம் குடும்பங்ளுக்கு, அரிசி, பருப்பு, கோதுமை, ரவா, பிஸ்கெட், பிரட், குடிதண்ணீர் பாட்டில், போர்வை மற்றும் பாய் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு தயார் செய்யப்பட்டு, லாரிகளில் கொண்டுச் சென்று, நேரிடையாக அமைச்சர் அவர்கள் பொது மக்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில், ஆற்றுப்பாலம் உடைந்த காரணத்தினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததை, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், குருங்காட்டூர் வழியாக ஏரல் பகுதிக்குச் செல்வதற்குச் தற்காலிக மாற்றுச் சாலை அமைக்கப்பட்டது.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்கள், இச்சந்திப்பின்போது கூறியதாவது,
ஐந்து தினங்களாகத் தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தின் அடிப்படையில், பெரும்பான்மையான விவசாயி பெருங்குடி மக்களின் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது.
மழையினால், கிராமத்திற்குச் செல்கின்ற சாலைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, பழுதடைந்துள்ளதால், சில பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மூன்று நாட்களாகத்தான், அரசின் தீவிர நடவடிக்கைகளினால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு துறைச் செயலாளர்களை அந்தந்தப் பகுதியில்
பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு. சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்பதை எடுத்துரைத்தார்கள்.
தற்போது, சாலைப்பணிகளை, தற்காலிகமாக சீர்செய்கின்ற பணிகள், நிரந்தரமாக சீர்செய்ய வேண்டியப் பணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றோம்.
போக்குவரத்தைப் பொறுத்தவரை 75% சதவீதம் சீரடைந்துள்ளது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில், 98 இடங்களில் சாலைகள் பழுதடைந்து இருந்தது. தற்போது, 65 இடங்களில் சாலைகள் சீர்செய்யப்பட்டு. போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 33 இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த இடங்களில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை, மாண்புமிகு அமைச்சர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருடன் சென்று ஆய்வு செய்தார்கள். நடைபெற்று வரும் 33 சாலைப் பணிகளில், ஏறத்தாழ 20 இடங்களில் சாலைப் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்கள்.
குறிப்பாக, ஏரல் பகுதிக்குச் செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சாலையை சீரமைக்கும் பணியை போக்குவரத்து தொடங்கிட பணிகள் தெரிவித்தார்கள். விரைந்து முடித்து, இன்று மாலையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை கடந்த இரண்டு நாட்களாக, திருவைகுண்டம் அரசு மருத்துவமனை முழுவதும் மழைநீர் அகற்றப்பட்டு.
மருத்துவமனை அறைகளில் மழைநீர் சென்றதால், அறைகள் மண்படிந்திருந்ததை எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு, மருத்துவர்கள் கூடுதலாக அயற்பணியில் வரவழைக்கப்பட்டு. நேற்று முதல் மருத்துவமனை இயங்கி கொண்டிருக்கும் நிலையில், நேற்று 150 புறநோயாளிகளும், இன்று 300 புறநோயாளிகளும் வருகை புரிந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்கள்.
மின்சாரத்தை பொறுத்தவரையில், திருவைகுண்டம் பகுதியில், 80% சதவீதப் பணிகள் நிறைவுப்பெற்று விட்டன. திருவைகுண்டம் பகுதியில் சுமார் 265 மின் மாற்றிகள்(Transformers) உள்ளன. 20.12.2023 அன்று 104 மின்மாற்றிகளும், 21.12.2023 அன்று 42 மின் மாற்றிகளும் சரிசெய்யப்பட்டு இயங்கி வருகின்றன. 79 மின் மாற்றிகள் வழங்கப்பட இருக்கின்றன. அதில், 25 மின்மாற்றிகள் சீரமைக்கும் பணி தீவிரமாக
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முடிவடையும் பட்சத்தில், இன்று மாலையே மின்சாரம் வழங்கப்படும் என்றும், 50 மின்மாற்றிகள் விவசாயத்திற்கு தொடர்புடையவை என்றும், மின்மாற்றிகளை சீரமைக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது என்றும், சீரமைக்கும் பணிகள் முடிவடைந்தவுடனேயே மின்சாரம் வழங்கப்படும் என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
நேற்றைய தினம் இந்திரா நகர், திருப்புலியங்குடி, போப்படையூர், பேரின்பபுரம், ஆயத்துறை, குலசேகரநத்தம், பராக்ரமப்பாளையம், பேரூர், சாயல்புரம், குருவப்புரம், இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், தோளப்பப்பண்ணை, பேய்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் போகமுடியாத நிலை இருந்தது. தற்போது இச்சாலைகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்தார்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ஏரல் பகுதியில் பாலம் உடைப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இடத்தில், தற்காலிக மாற்றுச் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியை மீண்டும் ஆய்வு செய்தார்கள்.
மழைபெய்த இரண்டு நாட்கள் கழித்து அரசின் சார்பாக நிவாரண முகாம் அமைக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுப்பணியின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இஆப., நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் திரு.இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை சிறப்பு அலுவலர் திரு.இரா.விஸ்வநாத், மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் சென்று. நிவாரணப் பணிகளை செயல்படுத்துவதில் பேருதவி புரிந்தார்கள்.