58 கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு 300 மில்லியன் கனஅடி தண்ணீரினை 23.12.2023 முதல் நாளொன்றுக்கு 150 கனஅடி / விநாடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வைகை அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.