தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் – தலைவர் திரு. ஜி. மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு. எஸ். அறிவழகன், செயலாளர் திரு. கிருஷ்ணகுமார், பொருளாளர் திரு. ஜி. ராஜேஷ், நூலகர் திரு.வி.எம். ரகு, செயற்குழு உறுப்பினர் திரு. ஏ. ரமேஷ், உறுப்பினர்கள் திரு.ஏ. இந்தியன், திரு. கே. சுப்பிரமணியன், திரு.வி.இ. அனிஷ்குமார், திருமதி வி. கயல்விழி, திரு. ஜி. முத்துகுமரன், திரு.எம்.வி. சதீஷ்குமார், திரு.ஏ.எம். நடராஜ் ஆகியோர் சந்தித்து, வாழ்த்து பெற்று, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன் அவர்கள் உள்ளார்.