• Mon. Oct 20th, 2025

நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியத்தை வழங்கினர்.. தி.மு.க. MLA’க்கள்..

Byமு.மு

Dec 23, 2023
பொது நிவாரண நிதி: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதிய வழங்கினார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு. பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களின் ஒரு மாத ஊதியமான 35 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 91 இலட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய், என மொத்தம் 1 கோடியே 27 இலட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.