• Sun. Oct 19th, 2025

ஜி.கே.மணி கிறிஸ்துமஸ் வாழ்த்து..

Byமு.மு

Dec 24, 2023
ஜி.கே.மணி கிறிஸ்துமஸ் வாழ்த்து

பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

           கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ சகோதர - சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
           கருணையின் வடிவமாகவும் சேவையின் தந்தையாகவும் அன்பின் பிறப்பிடமாகவும் போற்றப்படும் இயேசுபிரான் பிறந்த நாள் டிசம்பர் - 25 உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடி மகிழும் திருநாள். 

வீடுகள் வண்ண விளக்குகளாலும் வண்ண, வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, நட்சத்திரங்கள் கட்டி, கிறிஸ்தமஸ் மரம் வைத்து, அனைவரும் புத்தாடை அணிந்து, கேக் வெட்டி, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்கி அன்பைப் பறிமாறி குதூகலத்துடன் மகிழ்வுடன் கொண்டாடும் திருநாள்.

கிறிஸ்தவர்கள், மற்றும் நிறுவனங்கள் கல்விச் சேவையிலும், மருத்துவச் சேவையிலும் அன்புள்ளத்தோடு பழகுவதிலும் பெருமைக்குறியவர்கள் என்பதை எண்ணிப் பெருமையுடன் பாராட்டுகிறோம். சகோதரத்துவமும், நல்லிணக்கமும் நிலைத்து அமைதி வழியில் சேவைநோக்கம் பெருகி, அமைதியுடன் வளர்ச்சியை நோக்கி,நாடு உயர அனைவரும் ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்போம்.

  • மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான்.
  • கண்ணீருடன் விதைப்பவன், மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வான். பகைவனிடம் அன்பு காட்டுங்கள், உங்களை சபிப்பவர்களை வாழ்த்துங்கள் உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
    *பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப்போல கபடமில்லாமலும் இருங்கள்.
  • ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காக திறக்கப்படும் .
    இந்நன்னாளில் கிறிஸ்தவ சகோதரச, கோதரிகள் அனைவரும் மன நிறைவுடன், மகிழ்வுடன் வளமுடன், ஆரோக்கியமுடன், புகழுடன், குடும்ப நலமுடன் நீடூழி வாழ இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.