• Sat. Oct 18th, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரை சந்தித்தார்…

Byமு.மு

Dec 29, 2023
பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரை சந்தித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் சந்தித்துப் பேசினார். நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு. ஜி.கே. மணி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.