• Wed. Feb 4th, 2026

மு.மு

  • Home
  • முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!..

முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!..

பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக 28 கொலை வழக்கு பதிவு

வங்கதேசத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சர்கள் உத்தரவின்பேரில் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள்…

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரயிலில் புறப்பட்ட பிரதமர் மோடி, உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

கலைஞர் நூல்கள் நாட்டுடைமை : கனிமொழி நன்றி

கலைஞர் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அனுமதி அளித்த தனது தாயார் ராசாத்திக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி. கலைஞரின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம்…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக பொறுப்பேற்றார் எஸ்.கே.பிரபாகர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக…

மிக உயரமான கோபுரம் பெங்களூருவில் அமைகிறது!..

பெங்களூரில் ரூ. 500 கோடி செலவில் மிக உயரமான ஸ்கை டெக் (Skydeck) கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 250 மீ உயரத்திற்குக் கட்டப்படும் இக்கோபுரம், டெல்லியின் குதுப் மினாரைவிட 3 மடங்கு உயரம் என கூறப்படுகிறது. இத்திட்டம்…

மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

காவிரி பிரச்னையில் விரைவில் ஒருமித்த கருத்து: தேவகவுடா

காவிரி பிரச்னை குறித்து இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். மதசார்ப்பற்ற தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேற்று காலை திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம்…

”பா.ஜ.க, இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி ஆகிருக்காது”: எல்.முருகன் பதிலடி

அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளது நாங்கள் தான் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மீனவர்கள் தட்ப வெப்பநிலை, புயல் போன்ற காரணங்களினால்…

நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்.