ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்துகளை பேசிவரும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணா சாலை ஜிம்கானாகிளப் காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகம் வரை நேற்று அமைதிப் பேரணி நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை
இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு விசா இல்லாமல் இன்று முதல் பயணிக்கலாம்.
சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார் .
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கி விற்பனை தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே
ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 18ம்…
தமிழகம் முழுவதும் தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பாஜ பரப்பி வருகிற பிரசாரத்தை முறியடிக்கிற வகையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவள்ளுர்…
கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்
ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய கருத்துக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் அவமானகரமானது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஜஸ்ரோதாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ்…
இஸ்ரோ அறிவித்த 103 காலியிடங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) மருத்துவ அலுவலர், அறிவியல் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 103 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு தேர்வாகுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.2,08,700 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதி…
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அம்பத்தூர் 7வது மண்டல பகுதிக்கு உட்பட்ட முகப்பேர்,…
இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பூந்தமல்லியில் நேற்று மாலை 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி நகரத் தலைவர் பாரக் பாஷா தலைமை…