வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரன் ரூ.54,000ஐ தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. கடந்த 3ம் தேதி சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை ரூ.300, ரூ.400, ரூ.500 என்று தினசரி உயர்ந்து வந்தது.
இதற்கிடையில் 4ம் தேதி சவரன் ரூ.52,360க்கு விற்றது. 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,725 ஆகவும், சவரன் ரூ.53,800 ஆகவும் இருந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6805க்கும் சவரன் ரூ.54,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர வைத்து கொண்டுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..