கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு!..
இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை 12 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், புதிதாக கிரெடிட் கார்டு வழங்கவும் கோடக் மகிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.…
பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!..
பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. ராஜஸ்தான்…
மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் வரலாறு காணாத சரிவு..
‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்தி உள்ளன’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர்…
புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்..!
புதுச்சேரியில் தேர்தலை ரத்துசெய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.…
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது!..
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்தது சிபிஐ. மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில்…
செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்!..
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20% வரை உயர்த்தப்பட்டது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட…
குஜராத்தில் பாஜக வேட்பாளர் ரூபாலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ராஜ்புத் மக்கள் போர்க்கொடி!..
ராஜ்புத் என்று அழைக்கப்படும் சத்திரிய சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஜராத் பாஜக எம்.பி. பர்சோத்தம் ரூபாலாவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. குஜராத்தில் பாஜகவை சேர்ந்த ராஜ்புத் தொகுதியின் வேட்பாளர் பர்சோத்தம் ரூபாலாவின் ராஜ்புத் சமூகத்திற்கு…
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு நிறைவு!..
மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டியுள்ளது, நரிமன் பயிட்டில் உள்ள சிவசேனா தாக்கரே குழுவின் சிவாலயா அலுவலகத்தில் மகாவிகாஸ் அகாடியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21…
டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு!.
டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி மொஹலா உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்; உண்மை நிலையை அறிய…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!.
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.” போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.