பொய்களைப் பரப்புவது தான் மோடியின் உத்தரவாதம்! – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், தண்டி யாத்திரையிலும், “வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்” பங்கேற்காதவர்கள், இன்று காங்கிரசுக்கு தேசபக்தியின் அறிவை புகட்டுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பற்றி எண்ணற்ற பொய்யான விஷயங்களை மோடி கூறினார். நான் கேட்க விரும்புகிறேன் – 1.…
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும்-டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது – போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம், மீண்டும் பழைய ஓய்வூதிய…
தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!..
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி முன்னேற்றம் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில்…
வேலைவாய்ப்பு குன்றி, தொழிலதிபர்கள் வளங்களை சூறையாடுகின்றனர்!. ராகுல் காந்தி விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது, ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் – 40% இளைஞர்கள் படிப்பிலிருந்தும் சம்பாதிப்பதிலிருந்தும் விலகி இருக்கிறார்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன, லட்சக்கணக்கான…
இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம்!.. எடப்பாடி பழனிசாமி காட்டம்
சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க்…
பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்!. கே எஸ் அழகிரி..
மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான…
பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்… பீதி அடையாதீர்கள். ராகுல்காந்தி
பிரதமர் மோடி தன்னை OBC என்று அழைக்கிறார். ஆனால் பின்னர் அவர் குழப்பமடைந்து, நாட்டில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன - பணக்காரர் மற்றும் ஏழை என்று சொல்லத் தொடங்கினார். எனவே, இந்தியாவில் சாதிகள் உள்ளதா இல்லையா என்பதை முதலில் அவர்கள்…
விடியா திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கண்டனம்!.
இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் காவிரியிலிருந்து மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு…
“வாழ்த்து கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” – நடிகர் விஜய்
தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும்…
இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுகண்டிக்கத்தக்கது: நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை தேவை!
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி…