மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் கூட எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை-ஜோதிமணி எம்பி.
“வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம்.” இவை மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் சில. மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில்…
மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் 2024:தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது! டி.டி.வி தினகரன்
தொலைநோக்கு சிந்தனை கொண்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வரவேற்கக் கூடிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளின் நலனுக்கான சிறப்பு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதை…
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை-திருமாவளவன்
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது. பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு…
அரசியல் ஒரு அலசல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அரசியல் தளம் தற்போது சூடு பிடித்து பரபரப்பாக உள்ளது. கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகள், மாநாடுகள் பாதயாத்திரை, ரதயாத்திரை என நடத்துவதாக விறுவிறுப்பாக உள்ளது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பிஜேபி…
ஆ.ராசா நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது-டிடிவி தினகரன்
மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு…
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி,கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து, கழகப் பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்,”புரட்சித் தமிழர்” எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில்…
மக்கள் தெய்வத்தை அவதூறாக பேசிய உன்னை மக்கள் மனிதப்பிறவியாக கூட மதிக்க மாட்டார்கள்!
மறைந்தாலும் மக்கள் மனங்களில் வீற்றிருக்கும் மாபெரும் தலைவரை அவதூறாக பேசியிருக்கும் ‘ஆ’ணவ ராசா புரட்சித்தலைவரின் பெயரைக் கூட உச்சரிக்க தகுதியற்றவர். கருணாநிதி வழி வந்தவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா? சிறுநரிகள் ஊளையிடுவதால் சிங்கத்தின் வலிமை குறைந்து விடாது! மக்கள் தெய்வத்தை அவதூறாக…
ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்
இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ,என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாகவாழ்ந்துக்கொண்டிருக்கின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன் ? டிடிவி தினகரன்
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை…
மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்-வைகோ
30.01.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை – 2024 எனும் அமைப்பின் சார்பில் காந்தியார் படுகொலை நாளை சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி…