• Tue. Oct 28th, 2025

தமிழ்நாடு

  • Home
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஜூன் 18ம் தேதி…

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்தார். சட்டவிரோத பணபரிமாற்ற…

விஷச்சாராய உயிரிழப்புகள் 37 ஆக அதிகரிப்பு… விஷச்சாராய உயிரிழப்புகள் கவலை தருகிறது ..தமிழ்நாடு ஆளுநர் ரவி இரங்கல்!

விஷச்சாராய உயிரிழப்புகள் கவலை தருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் பல பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு…

விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்க: விசிக

விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். விஷச் சாராயம் விற்றவர் மட்டுமின்றி, அதனை தயாரித்தவர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சரின்…

விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க எண்களை அறிவிப்பு..!

திருப்பத்தூரில் விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை எண்களை அறிவித்துள்ளது. 91599 59919 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் திருப்பத்தூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு!..

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு!

1,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக அபிநயா போட்டி..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். ஜூலை 10ல் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடவுள்ளார்.

நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவிகள் போல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படும். திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…