• Wed. Oct 29th, 2025

தமிழ்நாடு

  • Home
  • நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் இருந்து பரப்புரையை முடித்து விட்டு வந்த போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்திய புலிகள் ஜனநாயகக் கட்சி சார்பில் வேலூரில் சுயேச்சையாக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் தணிக்கையில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களுக்கு, என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து…சசிகலா

புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப்புத்தாண்டில், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். காலங்கள் பல மாறினாலும், கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ் மொழியை…

தமிழ்ப் புத்தாண்டு – டிடிவி தினகரன் வாழ்த்து!.

சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய குரோதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். “தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று…

ஓய்வில்லா உன் உழைப்பு என்னை உருக்குகிறது: ஓட்டத்தை தொடருங்கள்! பாட்டாளி இளஞ்சிங்கங்களே!..

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!.. கொண்ட இலக்கை வென்று முடிக்கும் வரை ஓயாத உயிரினம் ஒன்று இந்த உலகில் உண்டென்றால், அதற்கு பாட்டாளி இளஞ்சிங்கங்கள் என்று தான் பெயர். மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டணி…

நெல்லையில் ராகுல் காந்தி உரை!..

தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல குடும்ப உறவு என்று நெல்லையில் ராகுல் காந்தி கூறி வருகிறார். அனைத்து மொழி, கலாச்சாரம் புனிதமானவை என நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக…

இந்தியா ஜனநாயக நாடாக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!..

தமிழ்நாடு மீனவர்கள், விவசாயிகளுக்கு எதுவும் செய்ய நரேந்திர மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிதி அதிகாரம், தொலைத்தொடர்பு முழுவதும் ஏகபோகமாக சில தொழிலதிபர்களிடம் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை. இளைஞர்களை வேலையில்லாத நிலைமைக்கு…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை: சத்யபிரதா சாகு!..

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும்…

காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை: செல்வப்பெருந்தகை!.

எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை என தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்கள், காங். தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் பரப்புரை செய்கிறோம். ‘நெல்லையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும்…

கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது…ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்…

கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஓசூர்…