• Sat. Oct 18th, 2025

தமிழ்நாடு

  • Home
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!

சாம்சங் நிறுவன ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநில…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!..

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கை நவ.29க்கு ஒத்திவைத்து உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதால் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக கூட்டணியில் விரிசலுக்கு வாய்ப்பில்லை: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுத்தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில்…

செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!

செபி தலைவர் மாதவி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தான் டெல்லி வர முடியாத நிலையில் இருப்பதாக காலை 9.30 -மணிக்கு தன்னிடம் மாதவி புச் தெரிவித்ததாக குழு தலைவர் தகவல் தெரிவித்தார். ஒரு…

பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன்

வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அரசிடம் தெரிவித்துள்ளன என்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில இடங்களில்…

மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் விமர்சனம்

மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி கற்பனையில் இருந்தார் என நினைத்தால் ஜோசியராகவே மாறிவிட்டார். பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என தெரியவில்லை. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். நவம்பர்…

புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்பான்!..

குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக…

அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு, மிதமான மழையே பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று பிற்பகலில் தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த…

சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை

சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தாலும் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.